மழைக்காலம்! என்ன செய்ய வேண்டும்?

Wait 5 sec.

தமிழ்நாட்டில் பரவலாக வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த ஒரு சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழைக்கால நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வழிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.தமிழக சுகாதாரத் துறை, அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும். அங்கே காய்ச்சல் அல்லது நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டால், அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும்.ஒரே பகுதியில் பலருக்கு காய்ச்சல் ஏற்படும் சூழல் உருவானால், உடனடியாக சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் மழைக்கால நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், தமிழக சுகாதாரத்துறை இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.