மறைந்த இசையமைப்பாளர் தேவா இசையுலகிற்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா (75), மாரடைப்பு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (அக். 17) காலமானார். தேவாவின் மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலரும் நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு இறுதிச் சடங்கின்போது அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.அவர் இசையுலகிற்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு அரசு மரியாதை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. TN govt honors for music composer Devaரஜினி, கமல், அஜித், விஜய் படங்களுக்கு இசையமைத்த 90ஸ் ஃபேவரைட் தேவா!