சென்னையில் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர்.தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா, மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. தேவாவின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், தேவா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னை தி. நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர். மேலும் பல்வேறு அரசியல் மற்றும் திரைப் பிரபலங்களும் தேவாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர்.எளிமையான கிராமத்துப்… pic.twitter.com/rX1OtNqsdJ— M.K.Stalin (@mkstalin) October 17, 2026M.K. Stalin pays personal tribute to the mortal remains of music composer Devaரஜினி, கமல், அஜித், விஜய் படங்களுக்கு இசையமைத்த 90ஸ் ஃபேவரைட் தேவா!