கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் வெளியான அக்கா இணையத் தொடரின் டீசர்!

Wait 5 sec.

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளை முன்னிட்டு ‘அக்கா’ என்ற இணையத் தொடரின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தத் தொடர் நெட்பிளிக்ஸில் அக்.30ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தத் தொடரில் கீர்த்தி சுரேஷ் பவானியாகவும், ராதிகா ஆப்தே ருத்ராவாகவும் அறிமுகமாகின்றனர்.பெர்னூரு பாரம்பரியமும் அதைவிட அதிகமாக பகையும் கொண்ட இடம். இங்கு ஆட்சி செய்யும் பெண்கள் யாருக்கும் அடிபணிவதில்லை. மாறிவரும் அதிகாரப் போட்டிகள் மற்றும் கொழுந்துவிட்டெரியும் பகைமைகளால் உருவான பெர்னூரு ராஜ்ஜியத்தின் மையமே இந்த இரண்டு பெண்கள்தான்.பெண்களை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதையான இத்தொடரை எழுதி, இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி. 1980-களின் பின்னணியில் தலைமுறை தலைமுறையாகப் பெண்களால் கட்டமைக்கப்பட்டு, ஆளப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பெர்னூரு என்ற கற்பனை உலகத்தை உருவாக்கியுள்ளார். தனது பிறந்த நாளை முன்னிட்டு ‘அக்கா’ இணையத் தொடரின் டீசர் வெளியானது மற்றும் தொடரின் அனுபவம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது: என்னுடைய பிறந்த நாளன்று ‘அக்கா’ டீசர் வெளியிட்டிருப்பது மிகவும் சிறப்பானது. இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே மறக்க முடியாதது பவானிதான். ராதிகா ஆப்ஃதேவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுடைய கதாபாத்திரங்கள் கதைக்கு சுவாரஸ்யமான பல பரிமாணங்களை தரும். நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களுடன் இணைந்து நான் பணியாற்றும் முதல் தொடர் இது. இந்தக் கதையின் தனித்துவமும், அதன் உலகமும்தான் என்னை ஈர்த்தது. நிச்சயம் பார்வையாளர்களுக்கும் இது பிடிக்கும் என நம்புகிறேன் என்றார்.Akka ki hukumat. Beheno ka raaj. Aur unpar khatre ka saaya ‍ pic.twitter.com/sF2mO7Wkvi— Netflix India (@NetflixIndia) October 17, 2026அனிருத் திருமணம்: முதல்வர் விஜய்க்கு நேரில் அழைப்பு! Teaser for the web series 'Akka' released on Keerthy Suresh's birthday!