பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நட்சத்திரப் போட்டியாளராக உள்ள ஜேசன் உடன் அதிக நேரத்தை நடிகை சாந்தினி செலவிட்டு வருகிறார். கடந்த வாரம் நடந்த போட்டியில் சாந்தினிக்கு ஆதரவாக ஜேசன் செயல்பட்டதில் இருந்தும், நாமினேஷன் பாஸை ஜேசன் வென்ற பிறகும் இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ளது.பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 5வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கான ஆளும் அணி தலைவராக அடாவடி அன்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர் அணித் தலைவராக தன்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வாரத்தில் கிச்சன் அணியில் ஜேசன் இடம்பெற்றுள்ளார். இதனால் அதிக நேரம் சமையல் அறையிலேயே செலவிட்டு வருகிறார். இதேவேளையில் எதிர் அணியில் இடம்பெற்றுள்ள சாந்தினி அதிக நேரம் சமையல் அறையிலேயே செலவிட்டு வருகிறார். சமையல் செய்துகொண்டிருக்கும் ஜேசனிடம் என்னுடம் பொழுதுபோக்கிற்காக பேசிக்கொண்டு இரு என்கிறார் சாந்தினி. ஜேசனும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டு அவரை தவிர்க்கும் வகையில் செயல்படுகிறார். இருந்தபோதிலும் சாந்தினி தொடர்ந்து ஜேசனுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். இதேபோன்று வரவேற்பறையிலும் ஜேசன் உடன் அதிக நேரத்தை சாந்தினி செலவிட்டு வருகிறார். சாந்தினியின் போட்டியை வெகுவாகப் பாராட்டிய ஜேசன் இந்த வாரம் உன்னுடையதாக இருக்க வேண்டும் என உற்சாகப்படுத்தினார். பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்களில் உன்னிடம் மட்டுமே அதிகம் பேசுவதாக சாந்தினியிடம் ஜேசன் கூறுகிறார். இதனால் சாந்தினி நெகிழ்ச்சி அடைந்து அவரை பாராட்டுகிறார். பிக் பாஸ் வீட்டில் 2 காதல் ஜோடிகள்! மறைமுகமாக சுட்டிக்காட்டிய முனியம்மா!Bigg Boss 10: Jason-Shanthini video grabs fans' attention