மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கான உடனடித் தேவையை குறைக்கவும், அதிகப்படியான வர்த்தக நிலையை கட்டுப்படுத்தவும் ஆர்பிஐ மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து 3 வது நாளாக வலுவடைந்தது 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 என்ற அளவில் வர்த்தகம் நிறைவடைந்தது.குறிப்பிட்ட வங்கிகள் மூலம் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்குத் தனியாக டாலர் வசதியை வழங்குதல் மற்றும் 'ஹெட்ஜிங்' பரிவர்த்தனைகளுக்கான செலவுகளை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முலம் உடனடிச் சந்தையில் டாலருக்கான தேவை குறையும், அதே வேளையில், ரூபாய் மீதான நிகரான ஊக வர்த்தக நிலையைக் கட்டுப்படுத்த இது உதவும் என்று அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 95.53 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, வர்த்தகத்தின் போது, அதிகபட்சமாக ரூ. 94.96 வரையிலும், குறைந்தபட்சமாக ரூ. 95.53 வரையிலும் சென்றது. முடிவில், ரூபாய் மதிப்பு ரூ. 95.38 ஆக இருந்தது. இது அதன் முந்தைய நாள் வர்த்தக முடிவிலிருந்து 40 காசுகள் உயர்வாகும்.நேற்று (திங்கள்கிழமை) ரூபாய் மதிப்பு 93 காசுகள் உயர்ந்து, கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலான காலத்தில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மிகப்பெரிய ஏற்றத்தைப் பதிவு செய்து, டாலருக்கு நிகராக ரூ. 95.78 என்ற அளவில் வர்த்தகம் நிறைவடைந்தது.கடந்த மூன்று வர்த்தக நாளில், ரூபாய் மதிப்பு மொத்தம் 150 காசுகள் உயர்ந்துள்ளது.Rupee strengthened for the third straight session on Tuesday and appreciated 40 paise to close at 95.38 against the US dollar.பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!