போராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் (சிஜேபி) தலைவர் தலைவர் அபிஜீத் தீப்கே செவ்வாய்க்கிழமை (அக். 13) எச்சரித்துள்ளார்.1993 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, பல்வேறு விதமான போராட்டங்கள் ஜந்தர் மந்தரில் நடைபெற்றன. அந்த வரிசையில், அண்மையில் நீட் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டமும் அங்குதான் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து, எஸ்ஐஆர் பணிகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக எழுந்த புகார் எழுந்தது. எனவே, அவர் பதவி விலக வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபியினர் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களையும் காவல்துறை கைது செய்தது.இதையடுத்து, கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்தும் இடமாகத் இருந்த ஜந்தர் மந்தரில் இனிமேல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை எனவும் அதற்கு மாற்று இடங்களையும் தில்லி காவல்துறை நேற்று (அக். 13) அறிவித்தது.இந்தத் தடையை மீறி ஜந்தர் மந்தர் அருகே சிஜேபியின் செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா ஆகியோர் இன்று போராட்டம் நடத்த முயன்ற நிலையில் அவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.இதுகுறித்து பேசிய அபிஜீத் தீப்கே, போராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் என மத்திய அரசை எச்சரித்துள்ளார்.கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற தலித் பெண் மீது தாக்குதல்! 5 பேர் மீது வழக்குப்பதிவுAbhijit Deepke, leader of the Cockroach Janata Party (CJP), warned on Tuesday (Oct. 13) that a nationwide protest would erupt if Jantar Mantar were closed to protesters.