உகந்தர் முனி இயக்கத்தில், ஷைனிங் பிக்சர்ஸ் சார்பில் மஹிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கும் கரிகாலா திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். புராணக் கதையம்சத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படம் பிரமாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் சந்தீப் கிஷனுடன் நடிகைகள் கேத்ரின் தெரசா, சாக்ஷி மடோல்கர் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகரின் தாயார் சத்யவதி, தயாரிப்பாளர் மஹிதர் ரெட்டியின் தாயார் பத்மா ரெட்டி ஆகியோர் படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் பேசிய சந்தீப் கிஷன், “கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கலை மீதான ஆர்வத்தின் காரணமாகவே ‘கரிகாலா’ மற்றும் ‘பவர் பெட்’ ஆகிய படங்களைத் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிட்டு பேசினார்தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்படுகிறது. இசையமைப்பாளர் ஸ்ரீசரண் பகாலா இப்படத்திற்கு இசையமைக்கிறார்