27 வயதில் காலமான மலையாள இயக்குநர்!

Wait 5 sec.

மலையாள இயக்குநர் பெல்ராஜ் கலாரிக்கல் (27 வயது) கொச்சி ஹோட்டல் அறையில் இறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்கட்ட தகவலில் மாரடைப்பு எனக் கூறப்படுகிறது. நிழல், மதுரம், தாகினி ஆகிய படங்களுக்கு துணை இயக்குநராக இருந்த பெல்ராஜ் கலாரிக்கல் கப்பி ஸ்குவாட் என்ற இணையத் தொடர் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இந்தத் தொடர் சில நாள்களுக்கு முன்புதான் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. இந்த நிலையில், துயரச் செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆறாண்டுகளாக காதலித்து வந்த இவர் கடந்த செப்டம்பரில்தான் திருமணம் செய்தார். இந்த நிலையில் அவர் ஹோட்டர் அறையில் இறந்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கப்பி ஸ்குவாட் என்ற இணையத் தொடரில் ரினோஷ் ஜியார்ஜ், அனாகா அஜித், தியா தீபன், ஜோயல் ஜோசப் என்ற நான்கு இளைஞர்களின் தொழில் முனைவோர் ஆகும் கனவைப் பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் துயரச் செய்தி அவரது நண்பர்கள் மற்றும் திரைத்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் இந்த இறப்பு குறித்து பதிவிட்டுள்ளது. Some goodbyes come far too soon. Rest in peace, Belraj Kalarickal.#JioHotstar pic.twitter.com/zTSqUl1YcN— JioHotstar Malayalam (@JioHotstarMal) October 17, 2026முதல்முறையாக ரேம்ப் வாக்..! அனுபவம் பகிர்ந்த சாரா அர்ஜுன்!Kappi Squad director Belraj Kalarickal passes away at age 27