லக்னௌவில் கட்டடத்தின் மொட்டை மாடியிலிருந்து காவலர்களால் தள்ளிவிடப்பட்ட நபர் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேச மாநிலம், ரவ்லி பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தின் மொட்டை மாடியில் லலித் ராஜ்புத்(38) தனது நண்பர்களுடன் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சீட்டாடிக்கொண்டிருந்தார். சூதாட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வந்த தலைமைக் காவலர்களான சுபம் ரதி மற்றும் ஆகாஷ் வர்மா ஆகியோர் ராஜ்புத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை மொட்டை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டதாக ராஜ்புத் தந்தை சந்தன் ராஜ்புத் குற்றம்சாட்டினார். இந்த சம்பவத்தில் அந்த இளைஞர் பலியானார். பலியானவரும் அவரது நண்பர்களும் சீட்டாட்டம் மட்டுமே விளையாடினார்கள் என்றும் சூதாடவில்லை என்றும் அவரது தந்தை தெரிவித்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பெரும் கூட்டம் கூடியது. பொதுமக்களின் ஆவேசத்தைக் கருத்தில் கொண்டு, பல்வேறு காவல் நிலையங்களிலிருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காவல் துறையினர் உடலை மீட்டு கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.துணை காவல் ஆணையர் ரவீந்திர குமார் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு தலைமைக் காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.A 38-year-old man died after two policemen allegedly threw him off the terrace of a building in the Rakabganj area here following a scuffle, his family alleged on Saturday.ஜார்க்கண்ட்: மாமா கொடுத்த கைத்துப்பாக்கி வெடித்ததில் 3 வயது சிறுவன் பலி!