தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.தில்லியில் வெள்ளிக்கிழமையில் தேசியக் கொடி ஏந்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், போராட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவை தில்லி காவல்துறை கைது செய்தது.இந்த நிலையில், தீப்கேவுக்கு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அமைதிப் பத்திரத்தில் அவர் கையெழுத்திட்டதும் விடுவிக்கப்படுவார் என தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, தேசியக் கொடியுடன் போராடிய சிஜேபியினர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கன்னாட் பிளேஸில் தேசியக் கொடியுடன் வெள்ளிக்கிழமை (அக். 16) போராட்டம் நடத்தப்படும் என சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே அழைப்பு விடுத்தார். இருப்பினும், போராட்டக் களத்துக்கு செல்வதற்கு முன்பே தடுக்கப்பட்டு, தில்லி காவல்துறையினரால் அபிஜீத் கைது செய்யப்பட்டார்.அதிமுகவில் இணைகிறாரா நடிகர் தனுஷ்?Delhi Special Executive Magistrate grants bail to CJP founder Abhijeet Dipke