இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. ரசிகர்களால் தேனிசைத் தென்றல் தேவா என அன்புடன் அழைக்கப்பட்டவர். இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் ஆகியோரின் ஆதிக்கம் இருந்த போது தனக்கான தனித்துவமான இசையமைப்பின் மூலம் ரசிகர்களிடம் அதிகம் சென்றடைந்தார். தேவாவின் கானா பாடல்களுக்கு எல்லா தலைமுறையிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக தேவா இன்று உயிரிழந்தார். இவரது திடீர் மறைவுக்குப் பலரும் அஞ்சலி, இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இரங்கல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும். — A.R.Rahman (@arrahman) October 17, 2026 இதில், “நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும்.” எனத் தெரிவித்துள்ளார். ஏ. ஆர். ரஹ்மானுக்குச் சென்ற தேவாவின் வாய்ப்பு... மனம் திறந்த ரஜினிகாந்த்!A. R. Rahman has expressed his condolences on the passing of music composer Deva.