தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து நகரின் பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. சென்னையில் அம்பத்தூர், எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்ட்ரல், கிண்டி மற்றும் வில்லிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் மாலையில் பணி முடிந்து வீடு திரும்புவோர் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.தென்மேற்கு பருவமழை முழுமையாக விடைபெற்றதைத் தொடர்ந்து, தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக, வரும் அக்டோபர் 22-ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை பெய்யும் நேரங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.As the northeast monsoon begins in Tamil Nadu, widespread rain has been lashing Chennai and its suburbs since Friday evening.அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடரும்!