டிஎல்எஃப் 2 வது காலாண்டு லாபம் 10 சதவீதம் அதிகரிப்பு!

Wait 5 sec.

புதுதில்லி: முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப் லிமிடெட், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2 வது காலாண்டிற்கான அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 10 சதவீதம் அதிகரித்து ரூ. 1,301.35 கோடியாக உயர்ந்துள்ளதாக இன்று அறிவித்தது.கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 1,180 கோடியாக இருந்தது.இதற்கிடையில், நடப்பு நிதியாண்டின் 2 வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்திலிருந்த ரூ. 2,261.80 கோடியிலிருந்து அதிகரித்து ரூ. 2,297.30 கோடியாக உயர்ந்துள்ளது.DLF Ltd reported a 10 per cent rise in its consolidated net profit for the quarter ended September.