ஞானேஷ் குமாருக்கு எதிராக லண்டனில் போராட்டத்தைத் தொடங்கிய சிஜேபி!

Wait 5 sec.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் நாடாளுமன்றம் அருகே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.எஸ்ஐஆர் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனிடையே, தில்லியில் வெள்ளிக்கிழமையில் தேசியக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தவிருந்த சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே கைது செய்யப்பட்டு, இன்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.இந்த நிலையில், போராட்டத்தின் அடுத்தகட்டமாக லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தின் அருகே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.லண்டன் நாடாளுமன்ற சதுக்கம் அருகே ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும், ஞானேஷ் குமாருக்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்காவில் இந்தியா்கள் மீதுவெறுப்புணா்வு அதிகரிப்பு: எம்.பி.க்கள் கவலைPeople supporting and opposing the CEC Gyanesh Kumar and the Cockroach Janta Party gather at Parliament Square in London