தேவநேசன், நாடோடி சித்தன், மனோரஞ்சன்... தேவா!

Wait 5 sec.

இசையமைப்பாளர் தேவா தன் ஆரம்ப காலங்களில் பெயரை மாற்றி வித்தியாசமான சிக்கல்களைச் சந்தித்தார். இசையமைப்பாளர் தேவா மாரடைப்பு காரணமாக இன்று சென்னையில் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவுக்குப் பலரும் அஞ்சலி, இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் நேரில் சென்று தேவா குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்தனர்.தேவாவின் உடல் நாளை (அக். 18) ஆற்காடு அருகே அவரது சொந்த ஊரான சக்கரமல்லூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.இசையமைப்பாளார் தேவாவின் இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம். திரைத்துறையில் சொந்த பெயரை மாற்றி சினிமாவுக்காக பெயர்களை வைத்துக்கொள்ளும் டிரெண்டிங் அன்று தீவிரமாக இருந்த காலம். ஒருபக்கம் எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி, இளையராஜா போன்ற பெரிய பெயர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. வெறும் தேவாவாக எப்படி போய் ஜாம்பவான்களுடன் மோதுவது? ஆரம்ப காலங்களில் சி. தேவா என்கிற பெயரிலேயே இசையமைக்க வருகிறார். அவர் நேரமோ என்னமோ... ஒன்றல்ல இரண்டல்ல அத்தான், வெள்ளைக்கிளி, நரி, அலைகள் ஓய்வதில்லை என கிட்டத்தட்ட 13 திரைப்படங்களுக்கு ஒன்றிரண்டு பாடல்கள் இசையமைத்ததும் அத்தனை படங்களும் கைவிடப்படுகின்றன. சினிமாவில் ஒரு இசையமைப்பாளர் ஒப்பந்தமான திரைப்படங்கள் அனைத்தும் கைவிடப்பட்டால் வாய்ப்புகள் வருமா?தேவா யோசித்தார். சி. தேவாவை மாற்ற வேண்டும் என நினைத்து ஜோதிடர் ஒருவரைச் சந்திக்க, அவர் நாடோடி சித்தன் என்கிற பெயரை தேவாவுக்கு வைக்கிறார். புரிகிறது; வித்தியாசமாகவும் இருக்கிறது. போதாதா? தேவா சில திரைப்படங்களுக்கு ஒப்பந்தமானதும் நாடோடி சித்தன் என்கிற அடையாளத்துடன் அதனை அணுகுகிறார். அந்த நேரத்தில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றிற்கு நாடோடி சித்தனாக பாடச் செல்ல, இவர் குழுவிலிருந்த முக்கியமான பாடகர் வரவில்லை. கச்சேரியில் குழப்பம் ஏற்பட, நாடோடி சித்தனுக்கு கல்லடி கிடைக்காத குறை என தேவா சுவாரஸ்யமாக பின்நாள்களில் குறிப்பிட்டிருகிறார். சி. தேவா, நாடோடி சித்தன் இரண்டும் கைகொடுக்கவில்லை. சினிமாவில் பெயர்தான் முக்கியம் இல்லையா? தளராத தேவா மீண்டும் ஜாதகத்தைத் தட்டித் தூக்கிக்கொண்டு செல்ல இப்போது கிடைக்கும் பெயர் மனோரஞ்சன்! நல்ல பெயர். ஹிந்தி சினிமா வரை கலக்கலாம் என புதிய பெயருடன் சுற்றிக்கொண்டிருந்தவருக்கு சி. தேவாவுக்கு என்ன ஆனதோ அதே நிலைதான். மனோரஞ்சன் இப்போது சித்ரஞ்சன் ஆகிறார். ம்ஹூம்... ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. எத்தனை பெயரை மாற்றுவது? போதும் என தன் பழைய பெயரான சி. தேவாவாகவே மீண்டும் வாய்ப்புகளைத் தேட ஆரம்பிக்கிறார். 1986-ல் மாட்டுக்கார மன்னாரு திரைப்பட வாய்ப்பு கிடைக்கிறது. அதில், இசை சி. தேவா! ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ அதே பெயருடன் வந்தார். முதல்படத்தில் இசை ஓரளவு கவனிக்கப்பட 1989-ல் ராமராஜன் தன்னுடைய மனசுக்கேத்த மகராசா திரைப்படத்தில் சி. தேவாவில் ’சி’ எதற்கு என தேவாவிடம் சொல்லி அதை நீக்க வைக்கிறார். இனிமேல் நீங்கள் தேவா மட்டும்தான். இதுவே சிறப்பாக இருக்கிறது எனச் சொல்ல, அன்றிலிருந்து 40 ஆண்டுகளாக தேவாவாகவே நீடிக்கிறார். இடையே, ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என்கிற பெயரும் அமைந்தது. ஆச்சரியமாக, இளையராஜா இசையமைத்துக்கொண்டிருந்த காலத்தில் அறிமுகமான இசையமைப்பாளர்களில் 28-வது ஆள் தேவா. இடையே, இசையமைக்க வந்தவர்களில் பலர் ராஜா அலையால் காணாமல் போக தேவா தனக்கென தனி பாணியாக கானா பாடல்களைத் திரைக்கு ஏற்ப மாற்றி தேவா ஹிட்ஸ்-களை உருவாக்குகிறார். இசையமைப்பாளராவதற்கு முன் எவ்வளவோ அவமரியாதைகளைச் சந்தித்திருந்தாலும் தேவாவுக்குள் இருந்த தீவிர முயற்சி அவரை எங்கும் கைவிடவில்லை. இன்றும் நடிகர் ரஜினிகாந்த்தின் சூப்பர் ஸ்டார் பெயர் இசைக்குத் துள்ள வைக்கிறார். ஒவ்வொரு ஆண்டு ஆயுத பூஜைக்கும் தேவாவின் நான் ஆட்டோகாரன் பாடல் ஒலிக்காத இடம் தமிழகத்தில் இருக்கிறதா?இன்று அவரது மறைவுக்குப் பின்பு தேவா ரசிகர்கள் வெற்றி நிச்சயம் பாடலை நினைவு கூர்ந்து வருகின்றனர். ”இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாதுசூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காதுவேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாதுஎல்லையை தொடும் வரை எனது கட்டை வேகாது”தேவா விதவிதமாக பல பெயர்களைச் சுமந்தார். ஆனால், பெயரில் என்ன இருக்கிறது? எல்லாம் உழைப்பில்தான்... என்பதை உணர்த்தும்படி வாழ்ந்தார். ஏ. ஆர். ரஹ்மானுக்குச் சென்ற தேவாவின் வாய்ப்பு... மனம் திறந்த ரஜினிகாந்த்!In his early days, music composer Deva changed his name and encountered some unusual complications.