ஆயுத பூஜை, விஜயதசமி நன்னாளைக் கொண்டாடும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்! ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்! என்று பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும் நாளை விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். CM Vijay expressed his heartfelt wishes to everyone celebrating the auspicious occasions of Ayudha Puja and Vijayadashami.அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!