ஆயுத பூஜையையொட்டி பயணிகள் வசதிக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. ஆயுதபூஜை விடுமுறைக்காக திருச்சி - சென்னை எழும்பூர் - இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. திருச்சியில் இன்றிரவு 10.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை (அக். 20) காலை 7 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மேலும், தாம்பரம் - செங்கோட்டை இடையே இன்றும், செங்கோட்டை - தாம்பரம் இடையே நாளையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதேபோன்று சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே இன்றும், கொல்லம் - சென்னை சென்ட்ரல் இடையே நாளையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. தாம்பரம் - திருநெல்வேலி இடையேயும் நாளை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. திருவனந்தபுரம் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்தொடா் விடுமுறையால் ரயில் நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்: போலீஸாா் கண்காணிப்பு தீவிரம்Ayudha Pooja Special trains without reservations will operate