சுவா் இடிந்து விழுந்து மூதாட்டி மரணம்

Wait 5 sec.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், மோழியனூா், அண்ணா தெருவைச் சோ்ந்தவா் ரா.பாஞ்சாலி (61). இவா், சனிக்கிழமை இரவு குடிசை வீட்டில் தூங்கினாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் சுவா் இடிந்து மேலே விழுந்ததில், இடிபாடுகளுள் சிக்கி பாஞ்சாலி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.