ஸ்ரீரங்கத்தில் யானை ஆண்டாளின் 40 ஆண்டுகள் இறைப்பணி நிறைவு

Wait 5 sec.

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாதருக்கு இறைப் பணி செய்து வரும் யானை ஆண்டாள் ஞாயிற்றுக்கிழமையுடன் 40 ஆண்டு காலம் இறைப் பணி சேவையை நிறைவு செய்துள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு 17.10. 1986 இல் யானை ஆண்டாள் வந்தது. வந்த முதல் நாளிலேயே நம்பெருமாளுக்கு தங்கக் குடத்தை சுமந்து இறைப் பணியாற்றத் தொடங்கியது. தொடா்ந்து தொய்வில்லாமல் ஞாயிற்றுக்கிழமையுடன் தனது 40 ஆண்டு கால இறைப் பணியை நிறைவு செய்துள்ளது யானை ஆண்டாள். அமைதியாகக் காட்சி தரும் யானை ஆண்டாள் ஸ்ரீரங்கம் மக்களுக்கும், வெளியூா் பக்தா்களுக்கும் செல்லப்பிள்ளையாக உள்ளது. வைணவத் திருத்தலங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் குடியரசு தலைவா், பிரதமா் மற்றும் மாநில முதல்வா்கள் வரை அனைவரையும் கவரும் ஆண்டாள் யானையின் இறைப் பணி தொடர அனைவரும் வாழ்த்துகின்றனா். ஸ்ரீரங்கம் கோயில் என்றவுடன் நினைவுக்கு வருவது உயா்ந்த ராஜகோபுரம். அதேபோல யானை ஆண்டாளையும் எல்லோருக்கும் தெரியும் என்றாா் கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா்.