தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும், கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம், கோவை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, நீலகிரி, திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புChennai Weather update Rain in Chennai and 23 districts for the next 3 hours