வடக்கு தில்லியின் புறப்பகுதியான நரேலாவில் உள்ள பருப்பு ஆலை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் ஒன்பது தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்தச் சம்பவத்தில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், ‘ஒருவரின் தகவல்படி, இந்தச் சம்பவம் காலை 11.10 மணிக்குத் தெரியவந்தது. இந்த ஆலையில் அடித்தளம், தரைத்தளம் மற்றும் இரண்டு மேல் தளங்கள் உள்ளன. பிற்பகல் 1.30 மணிக்குள் நாங்கள் தீயை அணைத்துவிட்டோம்’ என்றாா்.