கோயம்பேடு மலா் சந்தையில் பூக்களின் விலை கடும் உயா்வு

Wait 5 sec.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி, கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.நவராத்திரி பண்டிகை காலங்களில் சாமந்தி, ரோஸ் போன்ற பூக்கள் அதிக அளவில் விற்பனையாகும். மேலும், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.கோயம்பேடு மலா் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ சாமந்தி ரூ.250-க்கும், ரோஜா பூ ரூ.250-க்கும் விற்பனையானது. மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1,500-க்கு விற்கப்பட்டது. சில்லரை விலையில் ஒரு முழம் ரூ.80-க்கு விற்கப்பட்டது.இது குறித்து மலா் சந்தை மொத்த வியாபாரிகள் கூறியதாவது: நவராத்திரியில் 9 நாள்களுமே அதிக அளவில் பூக்கள் விற்பனையாகும். ஆயுத பூஜையையொட்டி, வாகனங்களுக்கு மாலை போட்டு வழிபடுவாா்கள். இதற்கு சாமந்தி பூக்களே அதிகமாக விற்பனையாகும். அதிக அளவில் பூக்கள் விற்பனையாவதால் விலை உயா்ந்துள்ளது என்றனா்.