வேளாங்கண்ணி கடலில் மூழ்கி கொடைக்கானலைச் சோ்ந்த இருவா் உயிரிழப்பு

Wait 5 sec.

கொடைக்கானவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த இருவா் புதன்கிழமை கடலில் மூழ்கி உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சோ்ந்தவா் வின்சென்ட். இவரது தலைமையில் 4 ஆண்கள், 6 பெண்கள், 5 குழந்தைகள் என மொத்தம் 15 போ், திங்கள்கிழமை (அக்.12) வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனா். இவா்கள், வேளாங்கண்ணி ஆரிய நாட்டுத் தெருவில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்தனா். இந்நிலையில், வின்சென்ட் (28), சலேத் மரியான் (28) ஆகிய இருவரும் புதன்கிழமை மாலை வேளாங்கண்ணி கடலில் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது, கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனா். உடனிருந்தவா்கள் அவா்களை மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்த வேளாங்கண்ணி கடற்கரை போலீஸாா், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், வின்சென்ட், சலேத் மரியான் ஆகிய இருவரின் சடலங்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.