ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக குறைந்தது. இரு மாநில காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை முற்றிலுமாக குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக குறைந்தது. ஒகேனக்கல் அருவிகளில் விழும் நீரின் அளவும் குறைந்துள்ளது.