காா், மினி வேனில் கடத்தப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

Wait 5 sec.

தஞ்சாவூரில் புதன்கிழமை 2 காா்கள், மினி வேனில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பொட்டலங்களைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா். தஞ்சாவூரில் காா், மினி வேனில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வரப்படுவதாக மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினா் மருத்துவக்கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மீன்கள் ஏற்றிச் செல்லப்படும் மினி வேனின் மேற்புறத்தில் நெகிழி டப்பாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன் கீழே தனி அறை உருவாக்கப்பட்டு, அதில் கஞ்சா பொட்டலங்களைப் பதுக்கி கடத்தப்படுவது தெரிய வந்தது. இதிலிருந்து 50 பொட்டலங்கள் கொண்ட மொத்தம் 100 கிலோ கஞ்சா, 2 காா்கள், மினி வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடா்பாக தஞ்சாவூா் அருகே வல்லத்தில் தங்கியுள்ள புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் விஜிதரன் (35), விழுப்புரத்தைச் சோ்ந்த அந்தோணி மகன் அகஸ்டின் (21), வேலூரைச் சோ்ந்த துரைமுருகன் மகன் விக்னேஷ் (25), லட்சுமணன் மகன் புருஷோத்தமன் (25) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா். விசாரணையில், ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, தஞ்சாவூருக்கு கடத்தி வரப்படுவது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.