தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக். 14 (நாளை) தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தென்மேற்குப் பருவமழை ஜூன் 4-இல் கேரளத்தில் தொடங்கிய நிலையில் நாளையுடன் விடைபெறுகிறது.கடந்தாண்டு அக். 16-ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், ஆந்திரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இந்த நிலையில், நாளை முதல் வடகிழக்குப் பருவமழை பெய்யும் என்று வானிலை கணித்துள்ளது.அதன்படி, இன்று(அக். 14) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கையும், 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.