அரசின் மெத்தனத்தால் இன்றைக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்கும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையைத் தீர்க்க தனியார் நிறுவனத்திடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மின் வாரியம் இறுதி செய்துள்ளது.அரசின் இந்த நடவடிக்கைக்கு ஏராளமான எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, தவெக அரசின் மெத்தனத்தால் யூனிட் ஒன்றுக்கு ரூ.35 கொடுத்து வாங்கும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார். இதுபற்றி, இன்று (அக். 14) அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சனையைத் தீர்க்க முடியாமல், காற்று இல்லை, மழை இல்லை, என தினமும் கதையடித்துவிட்டுக் கொண்டிருந்தவர்கள், உண்மைகளை மறைக்க முடியாமல் இன்றைக்குத் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவில் யூனிட் ஒன்றுக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10-க்குக் குறைவாக மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த அரசின் மெத்தனத்தால் இன்றைக்கு ரூ.35-க்கு வாங்கும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொன்னால் கஜானா காலி என கையை விரிப்பவர்கள், இன்று கொள்ளை விலையில் கொள்முதல் செய்து தமிழ்நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்க உள்ளனர். இதுதான் தவெக அரசின் “மாற்ற” அரசியலா?” எனக் கூறியுள்ளார். ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!Kanimozhi MP has condemned the government's lethargy, stating that TN has been pushed to a situation where it has to purchase a unit of electricity for Rs 35.