டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் புதிய சாதனை படைத்துள்ளார். அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் டாப் 5ல் இடம் பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஹேசில்வுட் இரண்டாவது இன்னிங்ஸில் தனது டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த விளையாட்டை விளையாடினார். 6 விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் அதிகமாக 5 விக்கெட்டுகள் எடுத்த, தற்போது விளையாடும் வேகப் பந்துவீச்சாளர்கள் வரிசையில் டாப் 5ல் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் மிட்செல் ஸ்டார்க் இருக்கிறார். அதிகமாக 5 விக்கெட்டுகள் எடுத்தவர்கள்1. மிட்செல் ஸ்டார்க் - 19 முறை 2. ககிசோ ரபாடா - 17 முறை 3. ஜஸ்பிரீத் பும்ரா - 16 முறை 4. ஜோஷ் ஹேசில்வுட் - 15 முறை 5. பாட் கம்மின்ஸ் - 14 முறை 6. கெமர் ரோச் - 11 முறைஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாJosh Hazlewood climbs to fourth on the most fifers in test cricket current fast bowlers list!