ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய் என்ற உடன் "ஷாக் அடித்தது" போல் ஆகிவிட்டது எனக் கூறி மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையைத் தீர்க்க தனியார் நிறுவனத்திடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு கொள்முதல் செய்ய மின் வாரியம் முடிவு செய்துள்ளது.தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஏராளமான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதனை விமர்சிக்கும் விதமாக ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 என்றதும் ஷாக் அடித்தது போல் ஆகிவிட்டது எனக் கூறி பெ. சண்முகம் இன்று (அக். 14) பதிவிட்டுள்ளார். இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய் என்ற உடன் "ஷாக் அடித்தது" போல் ஆகிவிட்டது. இதுவரை இப்படி ஒரு கொள்ளை விலையை கேள்விப்பட்டது கூட இல்லை. விலைவாசி அதிகமாகும் போது, யானை விலை, குதிரை விலை சொல்றான் என்று மக்கள் கூறுவார்கள். அவசரத்திற்கு கேட்டால் அவன் சொன்னது தான் விலை என்று ஆகிவிட்டது. தனியாருக்கு லாபம், கொள்ளை லாபம், மேலும் இலாபம் என்று தான் செயல்படுவார்களே தவிர மக்கள் நலன் என்பதெல்லாம் கடுகு அளவு கூட இருக்காது என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் இது” எனக் கூறியுள்ளார். ஏற்கெனவே, நாட்டில் எந்த மாநிலமும் இவ்வளவு விலை கொடுத்து மின்சாரம் வாங்கியதில்லை எனவும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 9.50 க்கு வாங்கிய போது ஊழல் இருப்பதாக தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் குற்றம்சாட்டியிருந்தார் எனவும் பெ. சண்முகம் பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!CPI(M) State Secretary P. Shanmugam posted that he felt "shocked" upon hearing that a single unit of electricity costs 35 rupees.