ரூ. 500 கோடி வசூலித்த ஹிந்தி த்ரிஷ்யம் - 3!

Wait 5 sec.

ஹிந்தியில் உருவான த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாகியுள்ளது. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷ்யம் படம் வெளியாகி வரவேற்பை பெற்று பான் இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதன் மூன்றாவது பாகம் கடந்த மே 21ஆம் தேதி வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. இருப்பினும் உலகம் முழுவதும் ரூ. 250 கோடி வரை வசூலித்தது. தொடர்ந்து, ’த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ என்ற பெயரில் ஹிந்தி ரீமேக் திரைப்படம் அக். 2ஆம் தேதி வெளியானது. அபிஷேக் பதாக் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர்கள் அஜய் தேவ்கன், தபு, ஷ்ரேயா சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆச்சரியமாக, ஹிந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இத்திரைப்படம் இதுவரை ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள ஒரிஜினல் திரைப்படத்தைவிட ரீமேக் வடிவமான ஹிந்தித் திரைப்படம் மிகப்பெரிய தொகையை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷின் சத்தியவான் - சாவித்திரி டீசர் அப்டேட்!The Hindi film Drishyam: The Conclusion has become a massive success.