டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 94.92 ஆக நிறைவு!

Wait 5 sec.

மும்பை: உள்நாட்டுப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மீட்சி ஆகியவற்றின் காரணமாக, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்து, டாலருக்கு நிகரான மதிப்பில் 3 காசுகள் சரிந்து ரூ. 94.92 ஆக நிலைபெற்றது.வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறி வருவதும் மற்றும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றால் ஏற்பட்ட தொடர்ச்சியான அழுத்தத்தின் மத்தியில், ரூபாய் தனது ஆறு நாள் தொடர் ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, எதிர்மறையாக பயணித்தது.வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 94.90 ஆக தொடங்கி, இன்றைய வர்த்தகத்தில், அதிகபட்சமாக ரூ. 94.75 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ. 94.97 ஐ எட்டியது. பிறகான வர்த்தகத்தில், முந்தைய நாள் முடிவிலிருந்து 3 காசுகள் சரிந்து ரூ. 94.92 ஆக நிலைபெற்றது.ரிசர்வ் வங்கி, டாலரின் தேவையைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையால், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு தொடர்ந்து 6 வது நாளாக ஏற்றம் கண்டு, டாலருக்கு நிகராக 10 காசுகள் உயர்ந்து ரூ. 94.89 ஆக இருந்தது.The rupee pared its initial gains and settled lower by 3 paise for the day at 94.92.அந்நியச் செலாவணி கையிருப்பு 72,603 கோடி டாலராக சரிவு!