ஆசிய பாரா விளையாட்டு: புதிய சாதனையுடன் முதல் தங்கம் வென்ற இந்தியா!

Wait 5 sec.

ஜப்பானில் நடைபெற்றுவரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை மோனா அகர்வால் திங்கள்கிழமை (அக். 19) வென்றுள்ளார்.ஆசியப் போட்டிகள் நிறைவடைந்த பிறகு, அதன் பாரா போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகளுக்கான 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்  ஜப்பானின் அயிச்சி நகோயாவில் நேற்று (அக். 18) தொடங்கின.வரும் அக். 24-ஆம் தேதி நிறைவடையும் இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்த நிலையில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் SH1 போட்டியில் இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் 250 புள்ளிகள் குவித்து புதிய ஆசிய சாதனையுடன் தங்கத்தைக் கைப்பற்றினார்.இதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான அவானி லேகரா 249.6 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.2023 ஹாங்சோ விளையாட்டுப் போட்டியில் 249.6 புள்ளிகளுடன் அவானி லேகரா படைத்திருந்த முந்தைய சாதனையை, தற்போது 250 புள்ளிகள் பெற்றதன் மூலம் மோனா அகர்வால் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.ஆசிய பாரா போட்டிகள் தொடக்கம்!Mona Agarwal on Monday (Oct. 19) won India's first gold medal at the 2026 Asian Para Games being held in Japan.