அர்ஷ்தீப் சிங் காயம்: இந்திய டி20 அணியில் புவனேஷ்வர் குமார்!

Wait 5 sec.

பெங்களூரில் நடைபெற இருக்கும் ஐந்தாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இணைக்கப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் தோள்பட்டை காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-2 என சமநிலையில் இருக்கிறது. பெங்களூரில் நாளை இரவு 7 மணிக்கு நடக்கும் கடைசி போட்டியில் புவனேஷ் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி போட்டியில் இந்தியா வெல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. பிளேயிங் லெவனில் புவனேஷ் விளையாடுவாரா என்பது நாளைதான் தெரியவரும். இந்திய அணி: ஷ்ரேயாஸ் ஐயர், அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், ரவி பிஷ்னோய், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், புவனேஷ்வர் குமார். ஓராண்டில் 16,340 பந்துகளுக்கு கீப்பிங்..! வியக்க வைக்கும் அலெக்ஸ் கேரியின் பணிச்சுமை! Arshdeep Singh sustains blow to bowling shoulder; Bhuvneshwar Kumar added to the squad for the Bengaluru T20I