ஆவினில் புதிய பால், தயிர், ஐஸ்க்ரீம் அறிமுகம்!

Wait 5 sec.

ஆவினில் 500 மி.லி. நிறைகொழுப்பு பால், 50 கிராம் கப் தயிர், ஐஸ்கிரீம் ஆகிய புதிய தயாரிப்புகள் அறிமுகமாகியுள்ளது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி சின்னசாமி, திருச்சி புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிமாங்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதலை நேரில் ஆய்வு செய்து, பால் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.தொடர்ந்து கொட்டப்பட்டு ஆவின் பால் பண்ணையில் 500 மி.லி. நிறைகொழுப்பு பால், 50 கிராம் கப் தயிர் மற்றும் கேண்டி ஐஸ்கிரீம் ஆகிய புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினார்.தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஆவின் பாலகங்கள் அல்லாத மற்ற சில கடைகளில் ஆவின் பால் விலை உயர்த்தி விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆவின் பால் ஒப்பந்த வாகனங்கள் வேலை நிறுத்தம் இதனிடையே அம்பத்தூரில் உள்ள ஆவின் ஆலையில் இருந்து பால் பொருள்களை கொண்டு செல்லும் ஒப்பந்த வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசல், வாகன பராமரிப்புக் கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில் 2023ல் போட்ட ஒப்பந்தப்படியே வாகனங்களை இயக்கச் சொல்வதாக ஆவின் வேன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. Aavin introduces new milk, curd, and ice creamகோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!