ஜெயிலர் 2 படத்தில் வரவேற்பைப் பெறும் பழக்கடை மூர்த்தி கதாபாத்திரம்..! யார் இந்த நமோ நாராயணா?

Wait 5 sec.

ஜெயிலர் 2 திரைப்படத்தில் மூர்த்தி என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுதியான வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த கதாபாத்திரத்தில் நடித்த நமோ நாராயணாவை ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகிறார்கள். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நேற்று (அக்.15) உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.நெல்சன் இயக்கிய ஜெயிலர் முதல் பாகம் கடந்த 2023ல் வெளியாகி ரூ.600 கோடி வசூலித்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.இதில் பழக்கடை மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நமோ நாராயணா நடித்துள்ளார். இவர் திரையில் வரும் காட்சிகளில் ரசிகர்களிடம் சிரிப்பை வரவழைக்கிறார். ”இந்த கதாபாத்திரத்தை வைத்து தனியாக ஒரு படத்தை எடுக்கலாம். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மெர்குரி, டோரதி படங்களை எடுக்கும்போது நெல்சன் ஏன் இவரை வைத்து தனியாக ஒரு படம் எடுக்ககூடாது?” என ரசிகர்கள் இயக்குநர் நெல்சனிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.க் கூறி வருகிறார்கள். ரஜினி ஒரு பக்கம் படத்தை கவர்ந்தாலும் மற்றொரு பக்கம் பழக்கடை மூர்த்தி கவனம் பெறுகிறார் என சமூக வலைதளத்தில் பேசி வருகிறார்கள். யார் இந்த நமோ நாராயணா? மென்பொருள் என்ஜினியராக பணியாற்றி வந்தவர் 2009ல் நாடோடிகள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், ஈசன், போராளி, குட்டி புலி, கொம்பன், ரஜினி முருகன், நாடோடிகள் 2, ராயன் படங்களில் நடித்துள்ளார். ஜெயிலர் 2 படம் இவரது சிறந்த படமாக இருக்கையில், ரசிகர்கள் இவரது கதாபாத்திரத்தையும் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள். என்னதான் படம் முழுவதும் அந்த Rajinism இருந்தாலும் இன்னொரு முக்கியமான character இந்த பழக்கடை மூர்த்தி. நெல்சனோட அந்த dark காமெடி பயங்கரமா work ஆன ஒரு character.சிராஜ் ஒரு எடத்துல இந்த பழக்கடை மூர்த்தி பத்தி ஒரு வசனம் சொல்லுவாரு, "அவன் எடுத்தது யானையும் இல்ல, அடிச்சது ராஜாவும்… pic.twitter.com/TsqEXnPDxE— @thisisvp (@Vignesh18911924) October 15, 2026Walk like a king or walk like you don’t care who’s the King and bishop are.Life is like a chess play it like Moorthi Anna! pic.twitter.com/tytU253So0— Raagh-ol (@Cringecat__) October 15, 2026Id Karthik Subburaj is making films like Mercury, Dorothy why can't Nelson make an out and out humour film with Namo narayana in lead roleSureshot theatre would go bangers pic.twitter.com/UAB8JNQ9kX— Er. சுல்தான் (@jillu_offl) October 15, 2026ரஜினியின் ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எவ்வளவு?Who is Namo Narayana? 'Jailer 2' actor wins fans' praise for his Moorthy character in Rajinikanth and Nelson's film