மணிப்பூரில் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி; 4 பேர் காயம்

Wait 5 sec.

மணிப்பூரில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலியான நிலையில் 4 பேர் காயமடைந்தனர். மணிப்பூர் மாநிலம், காம்ஜோங் மாவட்டத்தில் குகி இனத்தவர் வசிக்கும் சாசாட் கிராமத்தில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் சனிக்கிழமை பலமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதனைத் தொடர்ந்து, உள்ளூர் ஆயுதக் குழுவினருக்கும் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மாலை நேரத்திலும் இந்த துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார். பழங்குடியினர் ஒற்றுமைக்கான குழு, சாசாட் கிராமத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன், அங்கு மத்தியப் படைகளை நிலைநிறுத்துமாறு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து மூத்த அதிகாரி மேலும் கூறியதாவது, சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் கிராமத்தைத் தாக்கியதில், கிராமத் தலைவர் தாங்ஜாஹோ ஹாவ்கிப் (48), கைலுன் ஹாவ்கிப், செய்கோஹோ, ஹெகின் ஹாவ்கிப், செய்பாவோ ஹாவ்கிப் ஆகிய நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி செய்கோஹோ பலியானார். இந்த மாநிலத்தில் பிப்ரவரி மாதம் முதல் குகி மற்றும் நாகா பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்களில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறைச் சம்பவங்களால் டமெங்லாங், காம்ஜோங், உக்ருல், நோனி மற்றும் காங்போக்பி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.A 36-year-old man was shot dead and four others were injured after suspected militants launched a gun attack at a village in Manipur's Kamjong district on Saturday, police said. சென்னை, 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு