அக்கா விமர்சனங்களுக்குக் காத்திருக்கிறேன்: ராதிகா ஆப்தே

Wait 5 sec.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த அக்கா இணையத் தொடரின் விமர்சனங்களுக்குக் காத்திருப்பதாக ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அக்கா’, பெண்களை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதை. நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இத்தொடரை எழுதி, இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி. 1980-களின் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘அக்கா’, தலைமுறை தலைமுறையாகப் பெண்களால் கட்டமைக்கப்பட்டு, ஆளப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பெர்னூரு என்ற கற்பனை உலகத்தை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.இந்த நிலையில், இத்தொடர் குறித்து பேசிய நடிகை ராதிகா ஆப்தே, “‘அக்கா’ தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பும் டீசர் வெளியீடும் கீர்த்தியின் பிறந்தநாளன்று வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி. நான் நடித்திருக்கும் ருத்ரா கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமானது. அவள் தனது கொள்கைகளால் வழிநடத்தப்படுபவள். தன்னைச் சுற்றியுள்ள உலகத்தையே கேள்விக்குள்ளாக்கும் இயல்பும் அவளுக்கு உண்டு. கதாபாத்திரங்களின் சிக்கலான தன்மையும், அவர்களின் மாறுபட்ட கண்ணோட்டங்களால் உருவாகும் பதற்றங்களும்தான் என்னை இந்தத் தொடரில் நடிக்க சம்மதிக்க வைத்தது. கடந்த பல ஆண்டுகளாக நெட்ஃபிளிக்ஸூடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். இதில் ‘அக்கா’ மறக்க முடியாத தொடர். சுவாரஸ்யமான இந்தக் கதையை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பார்வையாளர்களின் விமர்சனங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். Radhika Apte has stated that she is looking forward to the reviews for the web series Akka, which stars actress Keerthy Suresh.