கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்!

Wait 5 sec.

2027 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறும் என பிசிசிஐ தரப்பிலிருந்து 10 ஐபிஎல் அணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து மூன்று சீசன்களுக்கு வெளிநாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் ஏலம், தற்போது மீண்டும் இந்தியாவிற்குத் திரும்புகிறது. இதன்படி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் என்று அணிகளுக்கு பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதேசமயம் ஏலம் தொடர்பான விளக்கக் கூட்டம் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஏலத்தில் தங்கள் அணியை பலப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு அணியும் முன்னணி வீரர்களை ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். கடந்த மூன்று சீசன்களுக்கான ஐபிஎல் மெகா ஏலம், துபை, ஜெட்டா மற்றும் அபுதாபி ஆகிய வெளிநாடுகளில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மற்றொருபுறம் ட்ரேடிங் முறையில் வீரர்களை மாற்றிக் கொள்ளும் பேச்சுவார்த்தையும் ஐபிஎல் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. The 2027 Indian Premier League auction will be held in Goa on December 16, as per BCCI's communication to the 10 teams.என் பயோபிக்கில் நடிக்க பிரியங்கா சோப்ரா தகுதியானவர்..! சவிதா புனியா பேட்டி!