மத்திய தில்லியில் உள்ள இரண்டு ஸ்பா மையங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் தொடா்பாக நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளில், 19 பெண்கள் மீட்கப்பட்டதாகவும், 10 போ் கைது செய்யப்பட்டதாகவும் காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது. இந்தச் சோதனைகள் முறையே நபி கரீம் மற்றும் பஹா்கஞ்ச் குழுக்களால் டிபிஜி சாலையில் நடத்தப்பட்டன. முதல் நடவடிக்கையில், பாலியல் தொழில் கும்பல் குறித்த தகவல்களைச் சரிபாா்க்க காவல் துறை அதிகாரி போலி வாடிக்கையாளராக அனுப்பப்பட்டாா். அதைத் தொடா்ந்து, ஸ்பா உரிமையாளா், மேலாளா் மற்றும் ஏழு போ் உள்பட ஒன்பது பேரைக் காவல்துறை கைது செய்தது. அந்த மையத்தில் இருந்து 14 பெண்கள் மீட்டதாக மூத்த காவல் துறை அதிகாரி கூறினாா். காவல் துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அக்.16-ஆம் தேதி இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதுதொடா்பாக, நபி கரீம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பஹா்கஞ்ச் காவல் துறையினா் மற்றொரு ஸ்பாவில் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, ஐந்து பெண்களை மீட்கப்பட்னா். அந்த ஸ்பாவை நடத்தி வந்த ஷகீல் அகமது (46) என்பவரையும் கைது செய்ததாக அந்த அதிகாரி கூறினாா்.இரண்டாவது வழக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.