இந்திய மகளிர் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்மிருதி மந்தனா அணி குறித்தும், கேப்டனாக செயல்படவுள்ளது குறித்தும் பேசியுள்ளார்.இந்திய மகளிர் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்மன்பிரீத் கௌர் அண்மையில் அவரது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதனையடுத்து, அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது.இந்த நிலையில், இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள போதிலும், டி20 வடிவிலான போட்டிகளில் இன்னும் கடினமாக உழைக்க வேண்டியிருப்பதாக ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: கேப்டனாக ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதல் இருதரப்பு தொடரில் விளையாடவுள்ளேன். ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதல் முறையாக விளையாடவுள்ளதால், இந்தத் தொடர் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என நினைக்கிறேன். அசோசியேட் நாடுகளுடன் விளையாடும்போது, நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என உணர்கிறேன்.சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இந்திய அணி 6 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக இந்திய அணி டி20 போட்டிகளில் எந்த மாதிரியான அணுகுமுறையை கடைப்பிடிக்கப் போகிறது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாங்கள் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளோம். ஆனால், சில இடங்களில் நாங்கள் எங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக டி20 போட்டிகளில் நாங்கள் கடின உழைப்பை வழங்க வேண்டியிருக்கிறது.இந்திய அணியில் புதிய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். முதல் நாளிலேயே பலவீனம் குறித்து நான் பேச விரும்பவில்லை. நாங்கள் நிறைய இடங்களில் எங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், முதல் நாளில் நேர்மறையான விஷயங்களை மட்டும் பேசுகிறேன்.கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாக அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். அதனால், கேப்டன் பொறுப்பு எனக்கு புதிது கிடையாது. ஆனால், கேப்டனாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புக்கு ஏற்றவாறு சிறப்பாக அணியை வழிநடத்த வேண்டும் என்றார்.டி20 வடிவிலான அறிமுக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.Smriti Mandhana, who has been appointed as the new captain of the Indian women's team, has spoken about the team and her upcoming role as captain.ஐபிஎல் 2027: டிரேடிங் மூலம் மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாதில் இணைந்த நடராஜன்!