ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்க மத்திய அமைச்சரவை இன்று (அக். 14) ஒப்புதல் அளித்துள்ளது.இந்த தீபாவளி போனஸானது சுமார் 11.40 லட்சம் ரயில்வே பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதில் தண்டவாளப் பராமரிப்பாளர்கள், ஓட்டுநர்கள், கார்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மற்றும் இதர சி பிரிவு பணியாளர்கள் போன்றோர் அடங்குவர்.இதற்காக ரூ. 2,009 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தகுதிவாய்ந்த ஒரு ரயில்வே ஊழியருக்கு அதிகபட்சத் தொகையாக ரூ. 17,951 வழங்கப்படும்.2025-26 ஆம் ஆண்டில் ரயில்வே துறை 167 கோடி டன் சரக்குகளைக் கையாண்டுள்ளதாகவும் சுமார் 741 கோடி பயணிகள் ரயில்களில் பயணித்ததாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் பணியாற்றிய இந்த ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக இந்த போனஸ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.மமதாவை கத்தியால் தாக்க முயன்ற புகார் ஆதாரமற்றது! - மே.வங்க காவல்துறை அறிவிப்பு!The Union Cabinet approved the payment of 78 days' wages as a Diwali bonus to railway employees today (Oct. 14).