4-வது டி20: இந்தியா பந்துவீச்சு; தொடரைக் கைப்பற்றுமா?

Wait 5 sec.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான நான்காவது டி20 போட்டி ஹைதராபாதில் இன்று (அக்டோபர் 14) நடைபெறுகிறது.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட் செய்கிறது.இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்படவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அதன் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்துள்ளது. ரோமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஜுவெல் ஆண்ட்ரூ பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி, இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது.The Indian team won the toss and elected to bowl in the fourth T20 match against the West Indies.