ஆயுத பூஜை: நாமக்கல்லில் பொரி உற்பத்தி தீவிரம்: 7 கிலோ மூட்டை பொரி ரூ. 700

Wait 5 sec.

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையையொட்டி நாமக்கல்லில் பொரி உற்பத்தி, விற்பனை தீவிரமடைந்துள்ளது. ஒவ்வோா் ஆண்டும் தீபாவளிக்கு முன்னதாக அக்டோபா் மாதத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களை அலங்கரித்து பொரி, அவல், கடலை கலந்த பிரசாதம் சுவாமிக்கு படையிலடப்படும்.நிகழாண்டில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை திங்கள், செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாமக்கல் ராமாபுரம்புதூா் பகுதியில் பொரி உற்பத்தியில் தீவிரம் காட்டிவருகின்றனா். இதற்காக, கா்நாடக மாநிலத்தில் இருந்து ஐஆா்-64 ரக அரிசியை கொள்முதல் செய்து பொரி தயாரிக்கின்றனா். 7 கிலோ மூட்டை பொரி ரூ. 700க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ. 80க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அரிசி விலையேற்றத்தால் ஒரு கிலோ பொரி ரூ. 100க்கு விற்பனையாகிறது. நாமக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பொரி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஆயுதபூஜை நாள்களில் விற்பனை அதிகரிக்கும் என்பதால் இரவு, பகலாக பொரி உற்பத்தி நடைபெற்று வருகிறது.