டாஸ்மாக் கடைகளில் 4 புதிய பீர் வகைகள்! தீபாவளிக்குள் விற்பனைக்கு வருமா?

Wait 5 sec.

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் பகைகள் விற்பனை செய்யப்படவிருப்பதாகவும், இதன் ஆரம்ப விலை ரூ.250 என நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது பற்றிய தகவல்கள் கசிந்ததும், தீபாவளிக்குள் இவை விற்பனைக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.டாஸ்மாக் நிர்வாகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் இதனை தெரிவத்திருப்பதாகவும், நான்கு பீர் வகைகளின் விலைகளை நிர்ணயித்து அண்மையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.கர்நாடகத்தில் உற்பத்தியாகும் ஹெய்னேகென் சில்வர் ப்ரீமியம் மால்ட் லேகர் பீர், சத்தீஸ்கரிலிருந்து சிம்பா ரோவர் சீரிஸ் ஸ்டிராங் ப்ரீமியம் பீர், மைசூருவில் உள்ள மதுபான ஆலையில் உற்ளபத்தியாகும் இரண்டு பீர் வகைகள் என டாஸ்மாக் கடைகளின் அலமாரிகளை நான்கு புதிய பீர் வகைகள் விரைவில் அலங்கரிக்கவிருக்கின்றன.இவை அனைத்தும் இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் பிரிவில் வைக்கப்படும் என்றும், இவற்றின் விலை ரூ.250 முதல் தொடங்கி, அனைத்து டாஸ்மாக் மற்றும் எலைட் கடைகளிலும் விற்பனை செய்யப்படவிருப்பதாகவும் அந்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.தமிழ்நாடு அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளுக்கு தற்போது 21 வகையான பீர் வகைளும், ஏழு வகையான இதர மதுபானங்களும் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படு வரும் நிலையில், பீர் வகைகள் இனி 25 ஆக உயரவிருக்கிறது.அனைத்து பணிகளும் நிறைவுபெற்று அரசு அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் அனுமதி கிடைத்ததும் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனை தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.