17.10.1976: கோதுமை ஊழல்: கருணாநிதி மீது கோர்ட்டில் சி.பி.ஐ. வழக்கு

Wait 5 sec.

சென்னை, அக். 16 - "சாஹூவாலா கோதுமை ஊழல்" என்று சொல்லப்படும் விவகாரத்தில் தமக்கும் (கருணாநிதிக்கும்), மற்றவர்களுக்கும் பண ஆதாயம் உண்டாக்கிக் கொள்ளுவதற்காக தமது (கருணாநிதியின்) உத்தியோக அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததாகவும், 4.5 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டதாகவும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீது மத்திய புலனாய்வு ஸ்தாபனம் (சி.பி.ஐ.), விசேஷ போலீஸ் அமைப்பு (எஸ்.பி.இ.) வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் ஒரு வழக்கினைத் தாக்கல் செய்திருக்கிறது. தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் சி. பி. ஐ. இந்த வழக்கில் புலன் விசாரணை நடத்தியது.இந்திய குற்ற தண்டனை விதித் தொகுப்பின் 161-வது பிரிவு (லஞ்சம் பெற்றுக் கொள்ளுதல்), 468-வது பிரிவு (கள்ள எழுத்து போடுதல்), 471-வது பிரிவு (பொய்யாக எழுதப்பட்ட தஸ்தாவேஜு என்று தெரிந்த தஸ்தாவேஜை உபயோகப்படுத்துதல்), 1947-ம் வருட ஊழல் தடுப்புச் சட்டத்தின் 5(ஏ), (டி) பிரிவுகளுடன் வாசிக்கப்படும் 5(2) பிரிவு ஆகியவற்றின் கீழ் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்திருக்கிறது.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதியான மதன்லால் என்பவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொருவர். அவர் அப்ரூவராக ஆகியிருக்கிறார்.தமிழ்நாட்டில் வறட்சியும், பற்றாக்குறை நிலவரமும் இருந்த போது, பஞ்சாப் மாநிலத்திலிருந்து அரசாங்கக் கணக்கில் தமிழ் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையை பகிரங்க மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பதற்குச் சாதகமான உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்காக லஞ்சம் பெற்றதாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை கூறுகிறது.தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பில் கோதுமையை இறக்குமதி செய்த இதர நிறுவனங்களுக்கு இந்த வசதி அளிக்கப்படவில்லை என்றும், இதன் மூலம் இந்த இரு நிறுவனங்களும் மிகுந்த பண ஆதாயம் பெறும் வகையில் அவற்றுக்குப் பகிரங்க மார்க்கெட் விற்பனையில் ஏக போகம் அனுமதிக்கப்பட்டது என்றும் குற்றப்பத்திரிகை கூறியது.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீது சி.பி.ஐ. திட்டவட்டமான ஒரு வழக்கை தாக்கல் செய்திருப்பது இதுவே முதல்முறை ஆகும்.நீதிபதி இந்தக் குற்றப்பத்திரிகையைத் தாக்கலில் எடுத்துக் கொண்டிருக்கிறார். ...சென்னை அருகே புயல் இன்று கரையைக் கடக்கும்சென்னை, அக். 16 - வங்காள குடாக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறியுள்ளது. சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு அது சென்னைக்கு 150 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு இருந்தது அது மேலும் தீவிரமடைந்து, ஞாயிறு காலையில் சென்னை அருகே கரையைக் கடக்கக் கூடும்.இவ்வாறு வானிலை அலுவலகம் வெளியிட்டுள்ள விசேஷ வானிலை அறிக்கை தெரிவித்தது.இந்தப் புயலின் விளைவாக செங்கல்பட்டு, தென்ஆற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களிலும் பாண்டிச்சேரியிலும் அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாகப் பெருமழை பெய்யக் கூடும் என்றும் அந்த அறிவிப்பு கூறியது.அதே சமயத்தில், செங்கல்பட்டு, தென் ஆற்காடு மாவட்டங்களின் கடற்கரைப் பகுதிகள், வட ஆற்காட்டின் எல்லைப் பகுதிகள், பாண்டிச்சேரியின் கடற்கரைப் பகுதிகள் ஆகிய இடங்களில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ...Wheat Scam: CBI files case against Karunanidhi in court16.10.1976: தமிழ்நாட்டில் பருவமழை மும்முரம் - கனமழை, புயல் எச்சரிக்கை