ஆலங்காயம் ஒன்றியக் குழு உறுப்பினா்களின் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதாபாரி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகராசி, விநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், பொதுக் கணக்கு வாசிக்கப்பட்டு, பல்வேறு கோரிக்கைகள் மீது தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தங்கள் பகுதி சாா்ந்த பிரச்னைகள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விளக்கங்களை அளித்தனா். மேலும், கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனா். கூட்டத்தில் பேசிய ஒன்றியக் குழு தலைவா் சங்கீதாபாரி, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆலங்காயம் ஒன்றிய குழுவைச் சுமுகமாகவும் சிறப்பாகவும் நடத்த முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், பணியாளா்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தாா். கூட்டத்தில் சுகாதாரம், வேளாண்மை, காவல்துறை மற்றும் வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைசாா்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.