தொடர்ந்து குறைந்துவரும் மேட்டூர் அணை நீர்வரத்து! - இன்றைய (அக்.17) நிலவரம்!

Wait 5 sec.

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், கடந்த சில நாள்களில் அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு கீழ் குறைந்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 640 கனஅடியில் இருந்து வினாடிக்கு 572 கனஅடியாக சற்று குறைந்தது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 57.02 அடியிலிருந்து 56.40 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 22.08 டி.எம்.சி-யாக உள்ளது.கடந்த செப்.1 ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டபோது அணையின் நீர்மட்டம் 91.56 அடியாக இருந்தது. ஆனால், அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்தபோதிலும், நீர்வரத்தை விட 18 மடங்கு அதிகமாக நீர் திறக்கப்பட்டு வந்ததாலும் நீர்மட்டம் வேகமாகக் குறைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 60 அடிக்கு கீழ் (56.40 அடிக்கு) சென்றுள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. காரணம், 45 நாள்களுக்கான பாசனக்காலம் முடிவடைந்த நிலையில், பயிரிடப்பட்டுள்ள பயிர்களைக் காக்க தண்ணீர் தொடர்ந்து வந்தால் மட்டுமே சாத்தியம். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே விவசாயிகளின் கவலை மாறும்.Water inflow to Mettur Dam has decreasedசென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி