தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நாதக வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள முதல்வர் விஜய் தாராபுரம் வந்திருந்தார். அதேசமயம், தாராபுரம், வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள சென்றனர். அதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். முதல்வா் விஜய் சாலை வலம் மேற்கொள்ள உள்ளதாகவும் இதனால் அந்தப் பகுதியில் அனுமதி வழங்கப்படாது எனவும் போலீஸார் கூறியிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் கட்சியினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்கள் பிரசாரத்தை தடுக்கும் விதத்திலேயே போலீஸார் செயல்பட்டு வருவதாகவும் ஒருதலைபட்சமாக போலீஸார் செயல்படுவதாகவும் கூறி, அப்பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தாராபுரம் நாதக வேட்பாளாரான கார்த்திகா மீது தேர்தல் பிரசாரத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் பிரசாரம் மேற்கொண்டது, முதல்வர் குறித்த அவதூறாகப் பேசியது என 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில், கோவையில் உள்ள கார்த்திகாவின் இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் காவல் துறையினர் அவரையும் அவரது கணவரையும் கைது செய்தனர்.Karthika, who contested as a Nathak candidate in the Tarapuram constituency by-election, has been arrested.அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!