தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் பொறுப்பேற்றார்!

Wait 5 sec.

தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (அக். 15) பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக கடந்த மாா்ச் மாதம் மாற்றப்பட்டாா். இதையடுத்து கேரள ஆளுநராக இருந்த ஆா்.வி. ஆா்லேகருக்கு தமிழகத்தின் ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவரை தமிழகத்தின் முழுநேர ஆளுநராக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு நியமித்து உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.இதையடுத்து தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (அக். 15) பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வின்போது, ​​ஆளுநரின் செயலாளர் சஜ்ஜன்சிங் ஆர். சவான் மற்றும் பிற அதிகாரிகளும் உடனிருந்தனர். அவருக்கு காவல்துறை சிறப்பு அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. முன்பு தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என். ரவிக்கும், முன்பு ஆட்சியில் இருந்த திமுகவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியதால் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த மே 10-ஆம் தேதி தவெக அரசு அமைந்ததும் ஆளுநா் ஆா்லேகருக்கும், முதல்வா் விஜய்க்கும் இணக்கமான சூழல் நிலவுதால், 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Rajendra Vishwanath Arlekar, Governor of Tamil Nadu assumed office at Lok Bhavanதங்கம் விலை குறைந்தது! 4 நாள்களில் ரூ. 2,920 சரிவு! அக். 15 நிலவரம்